தோட்டத்தில் சாதரணமாக வளரும் இந்த கீரை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வராம பார்த்து கொள்ளும்… தெரியுமா???

Author: Hemalatha Ramkumar
13 September 2024, 1:59 pm

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் அல்லது வரி தழும்புகள் என்பது பெரும்பாலான பெண்கள் சந்தித்து வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. தோலில் ஏற்படும் இந்த வடுக்கள் அதிவேக உடல் எடை இழப்பு அல்லது உடல் எடை அதிகரிப்பு காரணமாக உண்டாகிறது.. இதற்கான தீர்வுகளை தொடர்ந்து பெண்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். வரி தழும்புகளை போக்க பல்வேறு ப்ராடக்டுகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டாலும் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத வீட்டு வைத்தியங்களும் இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவுகிறது. எனவே அவ்வாறான ஒரு சில வீட்டு வைத்தியங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

வரி தழும்புகள் எதனால் உருவாகிறது? 

திடீரென்று அதி வேகமாக உடல் எடை கூடினாலோ அல்லது குறைந்தாலோ அது வரி தழும்புகளை உருவாக்கும். மேலும் கர்ப்ப காலத்தின் போதும் பெண்களுக்கு அதிவேக உடல் எடை அதிகரிப்பு ஏற்படுவதால் அந்த சமயத்தில் அவர்களுக்கு வரி தழும்புகள் உருவாகிறது. அதுமட்டுமல்லாமல் வயதுக்கு வரும் பொழுது பெண்களின் வளர்ச்சி விரைவாக இருப்பதால் இருப்பதாலும் வரி தழும்புகள் உருவாகலாம். இப்போது வரி தழும்புகளை போக்க உதவும் ஒரு சில வீட்டு வைத்தியங்களை பற்றி பார்க்கலாம். 

மாய்சரைசர்கள் 

வரி தழும்புகள் ஏற்படாமல் தவிர்க்க ஒருவர் கோக்கோ, பட்டர், பாதாம் எண்ணெய் மற்றும் வல்லாரை (சென்டெல்லா ஏசியாடிக்கா) போன்றவை அடங்கிய மாய்சரைசர்களை பயன்படுத்தலாம். இந்த பொருட்கள் வரி தழும்புகள் வருவதை முற்றிலுமாக தடுக்காது என்றாலும் கூட ஓரளவு வரி தழும்புகளை கட்டுப்படுத்த உதவும்.

வல்லாரை  

இந்த தாவரம் வரி தழும்புகள் வருவதை தவிர்க்கவும் ஏற்கனவே வந்த வரி தழும்புகளை போக்கவும் உதவுகிறது. வல்லாரை கீரை கொண்ட மாய்சரைசர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது வரி தழும்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு பெரிய அளவில் உதவி செய்கிறது. 

உடல் எடையை கட்டுப்படுத்துங்கள் உங்களுடைய உடல் எடையை சீராக பராமரித்தல் மற்றும் உங்களுடைய உடல் எடையில் திடீர் மாற்றங்களை தவிர்ப்பதன் மூலமாகவும் வரி தழும்புகள் உருவாவதை உங்களால் தடுக்க முடியும். ஏனெனில், இது போன்ற மாற்றங்கள் கொலாஜனை உடைத்து அதன் விளைவாக வரி தழும்புகளை உருவாக்குகிறது.

  • many production companies are applying for the title operation sindoor போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!