எனக்கு மூன்று குழந்தைகள்….. அஜித்தே சொன்ன விஷயம் – யார் அந்த இன்னொரு குழந்தை?

Author:
14 September 2024, 2:37 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்றது. அதை அடுத்து தற்போது குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார் .

Actor ajith

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் அஜித்தின் அம்மாவாக வலிமை திரைப்படத்தில் நடித்த நடிகை சுமித்ரா பேட்டி ஒன்றில் அஜித் கூறிய பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவரின் ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அஜித் ஒரு பெரிய நடிகர் போன்று நடந்து கொள்ளவே மாட்டார். அவர் மிகவும் சிறந்த மனிதர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட எல்லோரையுமே ரொம்ப அன்பாக பார்த்துக் கொள்வார். குடும்பத்தில் ஒருவரை போல எல்லோரிடமும் பழகுவார் .

Actress sumithra

மேலும் அவர் என்னிடம் ஒருமுறை தனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது அவருடைய மனைவிதான் அவருக்கு முதல் குழந்தை என்றும் அடிக்கடி கூறுவார். செட்டில் என்ன ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் வந்து கவனிப்பார் .

இதையும் படியுங்கள்: அந்நியன் “குட்டி அம்பி”யா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க – இன்னொரு ஷாக்கிங் விஷயம் சொல்லவா?

ajith-updatenews360

அப்படி ரஜினிகாந்த் போன்ற நல்ல குணம் கொண்டவர் அஜித் குமார் என சுமித்ரா மிகுந்த பெருமையோடு அவரைப் பற்றி பேசினார். அஜித் தனது மனைவியை குழந்தையாக பார்க்கும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் மனைவின் மீது எவ்வளவு அன்பு என அவரை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!