முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்.. அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் பரபர புகார்..!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 5:59 pm

குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவரவாதி என்ற அச்சிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது குறித்து நடவடிக்கைக எடுக்குமாறு அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் கூறுகையில், குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்ற அச்சிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும் படிக்க: பூனையால் துடித்துடிக்க உயிரிழந்த பெண்… வீதியில் இருந்த பாம்பை வீட்டுக்குள் விட்டதால் நடந்த பரிதாபம்!

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கோவைப்புதூர் பகுதிகளில் இதே போன்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் அந்த சமயத்தில் இது தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டதாகவும் கூறினார்.

மீண்டும் அதே போன்ற செய்திகள் தற்போது பரப்பப்பட்டு வருவதாகவும் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய செயலில் ஈடுபடும் தீய சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல் ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். இனியும் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் வழக்கறிஞர்கள் அனைவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!