TRP-க்காக நடத்தப்பட்ட நாடகம்…. பிக்பாஸ் 8ல் மணிமேகலை? ஓஹோஹ் விஷயம் இதுதானா?

Author:
21 September 2024, 4:49 pm

குக் வித் கோமாளி சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த விஜே மணிமேகலையை அவரது வேலை செய்யவிடாமல் பிஜே பிரியங்கா தொடர்ந்து அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் அவரை டாமினேட் செய்து வந்ததாகவும் கூறி நிகழ்ச்சி இருந்து அதிரடியாக வெளியேறினார் .

இதற்கிடையே பிரியங்கா பேசிய ஆடியோ இணையத்தில் லீக்காகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியது இதனால் விஜே மணிமேகலை மற்றும் பிரியங்காவுக்கு இடையே ஏற்பட்ட அந்த சண்டை விவகாரம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதமாக பேசப்பட்டிருக்கிறது.

CWC

இந்த நிலையில் இதெல்லாம் வெறும் டிஆர்பிக்காக நடத்தப்பட்ட நாடகமா என்ற ஒரு சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது. இது குறித்து பேசி இருக்கும் பிரபல பத்திரிகையாளர் ஆன செய்யாறு பாலு. இந்த விவகாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட நாடகமா? அல்லது பிக் பாஸ் சீசன் 8க்காக நடத்தப்பட்ட நாடகமா? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது.

நான் பிரியங்கா கன்னடத்து பெண் என்று ஒரு வீடியோவில் சொன்னதற்கு பீஹாரி பீஹாரி என்று கமெண்ட் செய்து பதிவிடுகிறார்கள். குஜராத்தியோ…. பீஹாரியோ என்ன இருந்தால் என்ன நாம் இந்தியாவை சேர்ந்தவர்கள் தானே. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். பிக் பாஸில் பேசிய பிரியங்காவின் அரசியலை தற்போது வீடியோவாக எடுத்து வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

manimegalai-vj-1

பிக் பாஸில் இந்த பெண் இப்படி ஒரு அரசியல் செய்ததும் ஆச்சரியம்தான். எல்லோரும் நமக்கு ஜால்ரா தட்டும் போது மணிமேகலை மட்டும் சலாம் போடவே இல்லையே என்ற எண்ணம் தான் பிரியங்காவுக்கு. மணிமேகலை சுயமரியாதையை கையில் எடுத்ததுதான் அவரது பலமாக உருவானது. இந்த பிரச்சனையே ஒரு செட் அப்செல்லப்பாடா என்கிறார்கள்.

கமல்ஹாசன் இல்லாத பிக் பாஸ் சீசன் வரப்போவதால் அதற்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது. விஜய் சேதுபதி மீது நம்பிக்கை இருந்தாலும் அவர் எப்படி தாக்குப்பிடிப்பார். இது எப்படி அவருக்கு செட் ஆகும் என்ற ஒரு கேள்விதான் பரவலான மக்கள் மனதில் இருந்திருக்கிறது. இந்த நாடகமே பிக் பாஸ் வீட்டிற்குள் மணிமேகலை அனுப்புவதற்காக போடப்பட்ட நாடகம் என செய்திகள் கசிகிறது.

மீடியாவில் இப்படி தன்னை பற்றி நல்லதனமாக பரபரப்பாக பேசப்பட்டால் தான் மக்கள் சப்போர்ட் அமோகமாக ஆரம்பத்தில் கிடைக்கும். அப்போதுதான் நிகழ்ச்சிக்கும் டிஆர்பி அதிகமாக கிடைக்கும். எனவே மணிமேகலை பிக் பாஸ் வீட்டில் நுழைவதற்காக இது போடப்பட்ட நாடகமா? என்பது ஒரு கேள்வி குறியாக இருக்கிறது .

ஆனால்,மணிமேகலை உங்க காசே வேண்டாம் உங்க நிகழ்ச்சியும் வேண்டாம் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி வெளியே சென்றவர் இதுபோன்ற நாடகத்திற்கு ஒப்புக்கொண்டு இருப்பாரா? அப்படியே ஒப்புக்கொண்டால் அது மணிமேகலைக்கு தான் பின்னடைவாக இருக்கும்.

VJ priyanka

இதையும் படியுங்கள்: அந்த பாடகி தான் என் உயிரை காப்பாற்றினார்…. தப்பா பேசாதீங்க – கொந்தளித்த ஜெயம் ரவி!

பிரியங்காவின் இந்த குக் வித் கோமாளி விவகாரம் டிஆர்பிக்காக நடத்தப்பட்ட நாடகமா? அல்லது பிக் பாஸ் சீசன் 8 க்காக நடத்தப்பட்ட நாடகமா என்று இனிமேல் தான் தெரியவரும் என செய்யார் பாலு இந்த பிரச்சனை பற்றி வெளுத்து வாங்கி இருக்கிறார் .

இதுவும் கிட்டத்தட்ட யோசிக்க கூடிய அளவில் தான் இருக்கிறது. ஒருவேளை பிக் பாஸ் சீசன் 8-ல் மணிமேகலை கலந்து கொண்டால் இது எல்லாமே நாடகம் என்பது நிதர்சனமான உண்மை ஆகிவிடும். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று….!

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!