படுக்கை அறை, பூஜை அறையில் கட்டு கட்டாக லஞ்சப் பணம் : மனைவியை காட்டிக் கொடுத்த கணவன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 12:45 pm

தினமும் மனைவி லஞ்சம் வாங்குவதாகவும், கட்டு கட்டாக பணம் வைத்துள்ளதாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார் கணவர்.

ஹைதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக உள்ளவர் திவ்ய ஜோதி. இவர் லஞ்சம் வாங்கி பணிகளை முடிக்க உத்தரவிடுவதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் திவ்ய ஜோதி தினமும் கட்டு கட்டாக பணம் கொண்டு வருவதாகவும், பீரோவில் ₹20 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை பண்டல் பண்டலாக லஞ்சப் பணத்தை வைத்துள்ளதாக அவரது கணவர் பகீர் புகார் கூறியுள்ளார்.

வீட்டின் பூஜை அறை, படுக்கை அறைகளில் பதுக்கி வைத்துள்ளதாக கூறி கணவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி லஞ்சம் வாங்குவதாக கணவனே புகார் கொடுத்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?