பஞ்சாப்பில் இருந்து வந்த லாரி.. பறிபோன திருப்பூர் அரசுப் பணியாளர் உயிர்!

Author: Hariharasudhan
11 October 2024, 12:28 pm

திருப்பூர் – அவிநாசி சாலையில், லாரி திரும்பியபோது அறுந்த மின் கம்பியால் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர் சுப்பான் என்ற மணி. 58 வயதான இவர், திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இவர் திருப்பூர் – அவிநாசி சாலை, எஸ்ஏபி ஸ்டாப் அருகில் குடிநீர் கசிவு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது,அவ்வழியாக பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் இருந்து, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு நுால் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதையும் படிங்க: மாயமான மாணவி… ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்தி உல்லாசம் : பாய்ந்தது போக்சோ!

இந்த லாரி, ரோட்டில் இருந்து கம்பெனி வளாகத்திற்குள் திரும்பியபோது, அங்கு தாழ்வாகச் சென்ற மின் கம்பி மீது உரசியது. இதனால் மின் கம்பி அறுந்து, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மாநகராட்சு ஒப்பந்தப் பணியாளர் மணி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய அனுப்பர்பாளையம் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!