மணிரத்னம் அழைத்தும் நடிக்க முடியாது என சொன்ன பிரபல நடிகர்.. எந்த படம் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2024, 2:09 pm

தமிழ் சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். காதல் காட்சி எடுப்பதில் வல்லவர். பெரும்பாலும் இவரது படத்தில் இருள் சூழ்ந்த காட்சிகளாகவே இருக்கும்.

இதுவரை 7 முறை தேசிய விருது வென்றுள்ள மணிரத்னம், நடிகர்களை தேர்வு செய்வதிலும் கெட்டிக்காரர். அப்படி இவர் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய நடிகர்கள், நடிகைகளும் உண்டு.

இதையும் படியுங்க: தீபாவளிக்கு வேட்டையன், கோட்? சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரீசண்ட் மூவிஸ்!

ஆனால் அப்படி வந்த வாய்ப்பை உதறிதள்ளியுள்ளார் பிரபல நடிகர் மைக் மோகன். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் மௌனராகம், இதயக் கோவில் போன்ற படங்களில் நடித்த மோகனுக்கு அஞ்சலி பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை தனி அறையில் வளர்ப்பதை போல காட்சிக்கு மோகன் ஒத்துக்கொள்ளாததால் அந்த படத்தில் இருந்து அவரே விலகிவிட்டார்.

பின்னர் ரகுவரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்து படம் சூப்பர்ஹிட் ஆனது. பாடல்கள் இன்று வரை பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…