காசு கேட்டா கூட ஆர்த்தி கிட்ட தான் ஜெயம் ரவி வாங்கி தருவான் : பிரபல நடிகர் கூறிய வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 1:27 pm

சினிமா பிரபலங்கள் திருமணத்திற்கு பிறகு விவாகரத்து செய்வது வாடிக்கையாகிவிட்டது.

தனுஷ், ஜிவி பிரகாஷ், அமலாபால், சமந்தா என லிஸ்ட் பெரிசுதான். இதில் சமீபத்தில் சேர்ந்தவர்தான் நடிகர் ஜெயம் ரவி.

காதலித்து தயாரிப்பாளர் மகளான ஆர்த்தியை திருமணம் செய்த ஜெயம் ரவி, திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒவ்வொருமுறையும் காசு வேண்டுமென்றால் மனைவியிடம் தான் கேட்டு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். மாமியாருக்காக பல படங்கள் நடித்துக் கொடுத்தேன், ஆனால் அதற்கான சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை. சரியாகிவிடும் என நினைத்தேன், ஆனால் இல்லை என தெரிந்ததும் பிரிந்துவிட்டேன். அவர்களுக்கும் இதில் விருப்பம் தான் என ஜெயம் ரவி கூறியிருந்தார்.

ஆனால் இது குறித்து ஆர்த்தி பதிவிட்டதாவது, அவர் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளார். போன் செய்தால் எடுத்து பேச மாட்டிங்கிறார். எனக்கு இதில் விருப்பமில்லை, அவருடன் சேர்ந்து வாழவே விருப்பம் என கூறியிருந்தார்.

இவர்கள் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகர் விக்ரம் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஜெயம் ரவி, அவரது தந்தை எடிட்டர் மோகன் அமர்ந்திருப்பார்கள்,

மேடையில் விக்ரமுடன் நடிகர் நிவின் பாலி இருப்பார். அப்பேது மச்சான் காசு இருந்தா 50, 100 கொடுடா என ஜெயம் ரவியிடம் தான் கேட்பேன், அவரு தான் எனக்கு தருவார் என கூறியவர், ஒரு முறை 1000 ரூபாய் கேட்டேன், உடனே ரவி அவரது மனைவியிடம் வாங்கிக் கொடுப்பார் என கூறியுள்ளார். இந்த வீடியோ பழையது என்றாலும் தற்போது வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!