தேவர் குரு பூஜை.. ஒரே நேரத்தில் கூடும் எதிரெதிர் துருவங்கள்!

Author: Hariharasudhan
28 October 2024, 6:31 pm

தேவர் குரு பூஜை அன்று பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என அனைவரும் மரியாதை செலுத்த உள்ளனர்.

ராமநாதபுரம்: வருடந்தோறும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது ஆயிரக்கணக்கான பேர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதிக்கு வருவர். அவ்வாறு வரும் அவர்கள், அங்கு உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், இவ்வாறு வருபவர்கள் இளைப்பாறும் வகையில், பசும்பொன்னில் 1.55 கோடி ரூபாயில் பிரமாண்டமான  முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்  தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த அரங்கத்தை இன்று (அக்.28) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன்படி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா வருகிற 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளார்.

அதேபோல், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 10.30 மணிக்கும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 10.00 மணிக்கும் மரியாதை செலுத்துகின்றனர்.

இதையும் படிங்க: உயிர் போயிடுச்சு.. இரங்கல் சொல்லாத விஜய் வருங்கால முதல்வரா? புஸ்ஸி ஆனந்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!

அவர்களைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரும் மரியாதை செலுத்துகின்றனர். இதன் காரணமாகவும், அங்கு வரும் பொதுக்களுக்காகவும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, தேவர் குரு பூஜை இன்று தொடங்கியுள்ளது. இன்று ஆன்மீக விழாவாகவும், நாளை அரசியல் நிகழ்வாகவும், நாளை மறுநாள் ஜெயந்தி நிகழ்வாகவும் கொண்டாடப்படும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!