விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் : அதிர்ச்சி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 12:47 pm

ஹைதராபாத்தில் உள்ள அல்லாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் கடந்த வெள்ளி அன்று வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் அவனை பார்த்து குரைத்தன. தெரு நாய்களிடமிருந்து தப்புவதற்காக அவன் வீட்டுக்குள் செல்ல ஓட்டம் பிடித்தான்.

இந்த நிலையில் அவனை விரட்டி பிடித்த தெரு நாய்கள் கவ்வி பிடித்து இழுத்து சென்று கடித்து குதறி படுகாயம் அடைய செய்தன.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வந்த பெற்றோர் தெரு நாய்களை விரட்டி சிறுவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் வீடு திரும்பி இருக்கிறான். சிறுவனைத் தெரு நாய்கள் இழுத்துச் சென்று கடித்து காயப்படுத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

இதையும் படியுங்க: தமிழ்நாட்டுல மட்டும் தான் இப்படி நடக்குது.. திமுகவுக்கு எதிராக நடிகை நிவேதா பெத்துராஜ்?

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து காணப்படுகிறது.

எனவே தெரு நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் சமயத்தில் மட்டும் மகா நகராட்சி அதிகாரிகள் பேருக்கு ஓர் இரண்டு பகுதிகளில் தெரு நாய்களைப் பிடித்து இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தங்கள் கடமையை தவிர்த்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?