நாங்கள் நினைத்ததை விஜய் செய்யவே இல்லை.. ஷோபா பேச்சு!

Author: Hariharasudhan
9 November 2024, 2:22 pm

நாங்கள் விஜய் மருத்துவராக வர வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் நடிப்பில் சென்று இப்போது எங்கோ இருக்கிறார் என அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில், சட்ட ரீதியான திரைப்படங்களை இயக்கி, அதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் திசை திருப்பலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பங்கு உண்டு. இப்படிப்பட்ட இயக்குனரின் மகனாகவும், திரை வாரிசாகவும் நுழைந்தவர் விஜய். முதலில் தந்தையைப் போன்றே சமூக ரீதியான படங்களில் நடித்தவர் பின்னர் காதலை மையமாகக் கொண்ட படங்களில் நடித்தார்.

அதன் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய விஜய், இறுதியாக கருத்து சொல்லும் நடிகராக மாறினார். இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் பட்டியலில், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ஜொலிக்கிறார். இதனிடையே, தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் துவக்கி உள்ளார். இதன் முதல் மாநில மாநாட்டையும் நிகழ்த்தி, ஆளும், எதிர் என அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்கும் அளவான இடத்தில் உள்ளார்.

பல்வேறு விமர்சனங்கள், இடையூறுகள் அமையப் பெற்றாலும், விஜய்க்கென தனிக் கூட்டமே உண்டு. இப்படி மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ள விஜய், ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் ஆசையாக இருந்து உள்ளது.

Shoba chandrasekar

இது குறித்து விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனியார் மாத இதழ் நடத்திய விருது விழாவில் மேலும் கூறுகையில், ” விஜய் மருத்துவராக வேண்டும் என்று டாக்டர், டாக்டர் எனச் சொன்னோம். ஆனால், விஜய் ஆக்டர், ஆக்டர் என்று சொல்லி நடிகராகிவிட்டார்.

இதையும் படிங்க: அஜித்தை கொண்டாடும் கோலிவுட்… ஏன் தெரியுமா?

இப்போது வேறொரு பரிணாமத்தை எடுத்துள்ளார். சிறுவயதில் இருந்து இப்போது வரை விஜய் என்ன நினைப்பாரோ, அதைத்தான் செய்வார். நினைத்ததைச் செய்து முடிக்காமல் அவர் விடமாட்டார். அதுதான் விஜய்யின் குணம்” எனக் கூறினார்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!