பத்து வருஷமாக ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கூட இல்ல, சூர்யா வெற்றிக்காக இன்னும் வெயிட் பண்ணனும் போல.

Author: kumar
15 November 2024, 2:40 pm

சூர்யாவை ஏமாற்றிய கங்குவா! இன்னும் வெற்றிக்காக காத்திருக்கணும் போல!

கங்குவா படமும் தோல்வி படமாக இருந்ததால், நடிகர் சூர்யாவின் வெற்றிக்கான காத்திருப்பு தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அவருக்கு ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கூட கிடைக்கவில்லை.

சூர்யா, கோலிவுட்டின் திறமைசாலி நடிகர்.தனது சினிமா பயணத்தில் பல சவால்களை சந்தித்தார். ஆரம்பத்தில் நடிக்கவும், நடனமாடவும் தெரியாதவர் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டார். அதனை தன் கடின உழைப்பால் மாற்றிய அவர், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகராக உயர்ந்தார். அவரின் பிரம்மாண்ட சாதனை ‘சூரரைப் போற்று’ படத்திற்கான தேசிய விருதுடன் முடிவடைந்தது.

Suriya last 10 years no box office Hit Kanguva Failed

அதே நேரத்தில், சூர்யாவுடன் சினிமாவில் வந்த சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் தொடர் வெற்றிகளால் முன்னேறினர். ஆனால், சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கான பிரச்சனைகள் தொடர்ந்தன. 2013-ல் வெளியான சிங்கம் 2 அவரின் கடைசி பெரிய வெற்றிப் படம். இதன் பின்னர் வந்த படங்கள் வெற்றிபெறவில்லை.

மேலும் படிக்க: கங்குவா இரைச்சலா.. நடிகர், இயக்குனரை பொளந்துகட்டிய ஆஸ்கர் நாயகன்!

சமீப காலமாக,அவர் நடித்த 10 படங்களும், கதைத் தேர்வின் காரணமாக தோல்வி அடைந்தன. கங்குவா படம், கடின உழைப்புடன் உருவானாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தற்காலிக தோல்விகளை மீறி, அடுத்த படத்தில் சூர்யா வெற்றி பெறுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்