கஸ்தூரி மாதிரி ஜெயிலுக்கு போக ரெடியா இரு… எச்சரிக்கும் பயில்வான் ரங்கநாதன்!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2024, 1:42 pm

கங்குவா படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்திற்கான நெகட்டிவ் கமெண்ட்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு சிலர் படக்குழுவின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்க: தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியா எஸ்கே?அமரன் செய்த மெகா சாதனை!!

கங்குவா படம் குறித்து சில விஷமிகள் எதிராக விமர்சனம் செய்து வருவதாக ஜோதிகா குற்றம்சாட்டியிருந்தார். ஒரு சினிமா ரசிகையாக சொல்கிறேன், முதல் அரைமணி நேரம் படம் இரைச்சலாக உள்ளது, ஆனால் படம் முழுக்க அப்படி இல்லை, கேமரா வேலைப்பாடுகள் இதுவரை பார்க்காத வகையில் சிறப்பாக உள்ளது என கூறியிருந்தார்.

சிறைக்கு செல்லும் சுசித்ரா?

இந்த நிலையில் பிரபல பத்திரிகையளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு சில விஷயங்களை தனியார் தொலைக்காசிக்கு கூறியுள்ளார். அதில், கங்குவா இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது ஜோதிகா வரவில்லை, சரி குடும்ப பிரச்னை என இருந்தாலும், டெல்லியில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்திருக்கலாம். அதையும் அவர் புறக்கணித்துவிட்டு கங்குவா நல்லா இருக்கு என விமர்சனம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Suchitra Talk Controversy About Jyothika

அதே சமயம் ஜோதிகாவை விமர்சித்த சுசித்ரா குறித்து பேசிய பயில்வான், கங்குவாவிற்கும் சுசித்ராவுக்கு என்ன தொடர்பு உள்ளது. எதற்கு அவர் ஜோதிகாவை விமர்சிக்கணும், பல கோடி சொத்து வைத்து மும்பையில் செட்டிலாகியுள்ள ஜோதிகாவை பிச்சைக்காரி என சுசித்ரா கூறியிருக்கிறார்.

confirm jail for Suchitra says Bayilvan

ஜோதிகா மட்டும் வழக்கு தொடுத்தால் கஸ்தூரி போல சுசித்ரா சிறைக்கு செல்ல வேண்டியதுதான். யாரோட பிரச்சனைக்கு போகாம அமைதியாக இருக்கும் சூர்யாவின் குடும்பத்தை பற்றி பேசுவதற்கு சுசித்ராவுக்கு அருகதை இல்லை என பயில்வான் கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!