100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”

Author: Selvan
24 November 2024, 4:32 pm

OTT-யில் மக்களை கவருமா கங்குவா

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா.இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்தது.

Kanguva on Amazon Prime

படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார்.தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகப் பிரமாண்ட பொருட்செலவில் வெளியானது.

படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது,அதுமட்டுமல்லாமல் எதிர்பார்த்த வசூலை பெறாமல் ஏமாற்றத்தை தந்தது.

இதையும் படியுங்க: விபத்தில் உதவியவர்களுக்கு பண்ட் கொடுத்த பரிசு…நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தற்போது இப்படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அமேசான் ப்ரைம் நிறுவனம் சுமார் 100 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது.விரைவில் அதிகாரபூர்வ தகவலை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பாக்கப்டுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!