இணையத்தில் கசிந்த பட காட்சிகள்…கொல மாஸில் அஜித்..வெறித்தனமான சம்பவம் உறுதி…!

Author: Selvan
28 November 2024, 3:32 pm

அஜித்தின் வெறித்தனமான கேங்ஸ்டர் காட்சிகள்

நடிகர் அஜித் சினிமா,கார் ரேஸ் என இரண்டிலும் கலக்கி வருகிறார்.தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.அதிலும் குறிப்பாக பொங்கல் அன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.மேலும் யோகி பாபு, பிரசன்னா,அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

முன்னதாக தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தின் பாடலுக்கு இசையமைப்பதாக இருந்த நிலையில் தற்போது ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவலும் அண்மையில் வெளிவந்தது.

இதையும் படியுங்க: புஷ்பா 2 படம் எப்படி இருக்கு…! வெளிவந்த விமர்சனத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி…

நாளுக்கு நாள் படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைக்கிறது.அந்த வகையில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதில் அஜித் தன் கைகளை பின்னால் கட்டியபடி வெள்ளை நிற உடையில் கெத்தாக நிற்பார்.இந்த காட்சியை பார்த்ததும் ரசிகர்கள் பொங்கலுக்கு வெறித்தனமான சம்பவம் உறுதி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித்தின் கரியரில் ஒரு மிரட்டலான கேங்ஸ்டர் படமாக குட் பேட் அக்லி இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?