அதிகாலையில் கோரம்.. டிப்பர் லாரி மோதி சிதறிப் போன வாகன ஓட்டியின் உடல்.!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2024, 10:22 am

ONE WAYல் வந்ததால் பறிபோன உயிர்

கோவை ஒப்பணக்கார விதியில் ஒருவழி பாதையில் ( One-way )
இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத விதமாக மோதியதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்த போக்குவரத்து பிரிவு போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் உயிரிழந்தவர் கேரளா மாநிலம் பட்டாம்பியை சேர்ந்த முஸ்தபா என்பதும் இவர் அதே பகுதியில் டீ கடை நடத்திவருவதும் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க: நாக்கைப் பிளந்து டாட்டூ.. ஏரியாவிற்கேச் சென்று ஏலியன்ஸ் கைது.. திருச்சியில் பரபரப்பு!

தனது டீ கடைக்கு தேவையான பொருட்களை இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்து மொத்தமாக வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல் தனது கடைக்கான பொருட்களை வாங்க வந்த நிலையில் ஒருவழி பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரிமீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  • many production companies are applying for the title operation sindoor போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!