சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
25 December 2024, 6:57 pm

ராஷ்மிகாவின் கல்லூரி கால வீடியோ வைரல்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா.இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா-2 தி ரூல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,வசூலை குவித்து வருகிறது.

Rashmika Mandanna College Video

ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரையரங்கு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை என அல்லல்படும் வேளையில்,மறுபக்கம் ராஷ்மிகா தன்னுடைய காதலனான விஜய் தேவர்கொண்டாவுடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்.இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில்,தற்போது ராஷ்மிகா மந்தனாவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்க: ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!

கல்லூரி படிக்கும் போது மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தினால் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இவர் 19 வயதாக இருக்கும் போது ஆடிசன் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அப்பாவி முகத்துடன்,கேமரா முன்பு கூலாக பேசி இருப்பார்.அப்படி இருந்த ராஷ்மிகாவா,இப்போ இப்படி மாறிட்டாங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…