’கலவரத்தை தூண்ட முயற்சி’ சீமானின் பரப்புரைக்கு தடை கோரி மனு!

Author: Hariharasudhan
17 January 2025, 1:26 pm

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு: இது தொடர்பாக, ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரத்தினசாமி, ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர் மற்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்து உள்ளார்.

அந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விளம்பரத்துக்காகவும், சுயலாபத்துக்காகவும் மக்களிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில், இனம், மொழி அடிப்படையில் பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் போது, பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்திப் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

Petition against Seeman

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழலில் பெரியார் மீது வேண்டும் என்றே வீண் அவதூறுகளை பொதுவெளியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பரப்பியுள்ளார். இது குறித்து தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விடுமுறை நாளில் சோகம்… ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்!

இந்த நிலையில், ஈரோட்டில் தேர்தல் பரப்புரை வாய்ப்பைப் பயன்படுத்தி, மீண்டும் இனம், சாதி, மொழி அடிப்படையிலான பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசி, கலவரத்தைத் தூண்டி விட சீமான் முயற்சிக்கிறார். அரசியலமைப்புச் சட்டப்படி இது மிகப்பெரிய குற்றமாகும். எனவே, கலவரத்தைத் தூண்டும் வகையில் சீமான் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!