சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!

Author: Selvan
5 February 2025, 10:00 pm

விரைவில் கலகலப்பு-3 ஷூட்டிங் ஆரம்பம்

நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல வித்தைகளை இறக்கி கலக்கி வரும் சுந்தர் சி பக்கம்,சமீப காலமாக அதிர்ஷ்ட காற்று வீசி வருகிறது.

இதையும் படியுங்க: மனதை வருடும் ‘தனியே’ பாடல்..அப்போ விடாமுயற்சி காதல் கதையா..கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்.!

இவருடைய படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது,அதுவும் பேயை வைத்து காமெடியில் பட்டையை கிளப்புவதில் கில்லாடியானவர்.சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மதகதராஜா திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை ருசித்து வருவதால்,சூட்டோடு சூடாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

Sundar C New Movie

ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த கலகலப்பு மற்றும் கலகலப்பு 2-வை தொடர்ந்து கலகலப்பு 3-யை சீக்கிரம் எடுக்க மும்மரம் காட்டி வருகிறார்.

முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி ஷிவா மற்றும் விமல் ஆகியோர் இந்த பாகத்திலும் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் இப்படமும் இவருக்கு மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?