பிரபல நடிகரோடு இணையும் வடிவேலு..இணையத்தில் கசிந்த புகைப்படம்..குஷியில் ரசிகர்கள்.!

Author: Selvan
9 February 2025, 7:57 pm

கம் பேக் கொடுக்கும் வடிவேலு

நடிகர் கார்த்தி நடிக்க உள்ள கார்த்தியின் 29-வது படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இப்படத்தை டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்குகிறார்.

இதையும் படியுங்க: சொந்தம் கொண்டாடிய வடிவேல்..புகார் அளித்த கிராம மக்கள்..பதட்டத்தில் பரமக்குடி கிராமம்.!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அசத்தலான காமெடியால் கொடி கட்டி பறந்தவர் வடிவேலு,ஆனால் அடுத்தடுத்து பல காமெடி நட்சத்திரங்கள் உருவாகியதால் வடிவேலுக்கு போதிய பட வாய்ப்புகள் வராமல் இருந்தன,இதனால் சில வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல்,இருக்குற இடம் தெரியாமல் இருந்தார்.

Vadivelu in Karthi 29

அந்த வகையில் சமீப காலமாக மீண்டும் கிடைக்கின்ற ரோலில் நடித்து வருகிறார், மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் அப்பா ரோலில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்திருப்பார்,தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் கார்த்தியின் 29-வது படத்தில் நடிகர் வடிவேல் நடிக்க உள்ளதாக போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

போஸ்டரை பார்க்கும் போது இப்படத்தில் வடிவேல் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பது போல் தெரிய வருகிறது.இப்படம் இந்த வருட கோடை விடுமறையொட்டி ரிலீஸ் ஆகும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?