அடிமேல் அடியெடுத்து வைக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
25 February 2025, 10:26 am

சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கி, இறுதி வந்த நிலையிலும் தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Gold Rate today

இதன்படி, இன்று (பிப்.25) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சீமானின் டூர்.. அதிர்ச்சி கொடுத்த ராணிப்பேட்டை நிர்வாகி.. அடுத்தடுத்து ஆட்டம் காணும் நாதக!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 809 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • sara arjun as heroine 40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!