மொக்க படத்தையும் WOW-னு சொல்லுறாங்க..சோசியல் மீடியாவால் ரசிகர்கள் ஏமாற்றம்..பிரபலம் பகீர்!

Author: Selvan
13 March 2025, 8:06 pm

மர்மர் படம் – சர்ச்சையின் மையம்

இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.இந்த படத்தின் புரமோஷன் வேலைகளை இன்ஃப்ளூயன்ஸர்கள் மூலமாகவே செய்துள்ளதாக இயக்குநர் ஹேமந்த் நாராயணன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நடிகர் டேனியல் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க: புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை..மருத்துவர்கள் சொன்ன தகவல்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் டேனியல்,தற்போது ராபர் எனும் படத்தில் நடித்துள்ளார்.அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, சமீபத்தில் வெளியான மர்மர் திரைப்படம் பற்றியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் Found Footage படம் எனச் சொல்லப்பட்ட மர்மர் படத்திற்கான புரமோஷனை இன்ஃப்ளூயன்ஸர்கள் செய்திருப்பது வேதனைக்குரியது.அவர்கள் சொல்வதைக் கேட்டால்,இது ஒரு அற்புதமான படம் போல தெரிகிறது.ஆனால் உண்மையில் மக்கள் அதை விமர்சிக்கிறார்கள்.

இந்த நிலைமை சினிமாவுக்கு நல்லதல்ல,இன்ஃப்ளூயன்ஸர்கள் தங்களின் விளம்பர சக்தியை தவறாக பயன்படுத்துகிறார்கள்என கூறியுள்ளார்.

சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் நடிகர்களை விட்டு, இன்ஃப்ளூயன்ஸர்களின் கையில் சென்றுவிடுவதாகவும்,டேனியல் கூறினார். இது பல நடிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

நீங்கள் உங்கள் சொந்த படங்களை உருவாக்கி நடிக்கலாம்,ஆனால் மற்ற நடிகர்களின் வாய்ப்புகளை பறிக்க கூடாது,சரியான திறமை வாய்ந்த நடிகர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…