திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

Author: Prasad
21 April 2025, 1:15 pm

டாப் தொகுப்பாளினி

விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு டிரெண்டிங்கான தொகுப்பாளினியே இல்லை என்று கூட கூறலாம். அந்தளவுக்கு விஜய் தொலைக்காட்சியின் செட் பிராபர்ட்டியாக திகழ்பவர் பிரியங்கா என்று அவரை கிண்டல் செய்பவர்களும் உண்டு. அவரது குரல் கணீர் என்று இருப்பதால் அவருடன் இணைந்து யார் தொகுத்து வழங்கினாலும் அவர்களது குரல் எப்போதும் மங்கியே ஒலிக்கும். 

before marriage priyanka was pregnant question raised by bayilvan ranganathan

கடந்த ஆண்டு “குக் வித் கோமாளி சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதே மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மணிமேகலை அந்நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது திருமணம்

பிரியங்கா 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றன்ர். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி பிரியங்கா வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் மிகவும் வயதானவரை திருமணம் செய்துகொண்டார் என சர்ச்சைகளும் எழுந்தன. 

before marriage priyanka was pregnant question raised by bayilvan ranganathan

இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், “பிரியங்கா திருமணம் மட்டும் அல்லாது அவருடன் குழந்தையும் பெற்றுக்கொள்ள விரும்புவதாக கூறுகிறார். குழந்தை பெற்றுக்கொள்வதற்காகத்தான் இந்த அவசர திருமணம் என்று வைத்துக்கொண்டால் அவர் ஏறகனவே கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வி வருகிறது. ஒரு வேளை அவர் கர்ப்பமாகிவிட்ட காரணத்தினால்தான் அவசர அவசரமாக தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டாரா? என தெரியவில்லை. அதை நீங்கள்தான் யோசிக்க வேண்டும்” என்று பகீர் கிளப்பும் வகையில் பேசியுள்ளார். 

பிரியங்கா திடீரென திருமணம் செய்துகொண்டது ஆச்சரியத்தை கிளப்பியுள்ள நிலையில் பயில்வான் ரங்கநாதனின் கேள்வி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!