தொகுப்பாளினி திவ்யதர்சினிக்கு 2வது திருமணம்.. கல்லா பெட்டியை நிரப்பும் விஜய் டிவி!!
Author: Udayachandran RadhaKrishnan5 May 2025, 3:43 pm
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து வருகின்றனர்.
பிரியங்கா, வசி என்பவரை 2வது திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து நெடு நாள் காதலர்களான அமீர் மற்றும் பாவனி திருமணம் நடந்தது.
இதையும் படியுங்க: பத்திரிகையாளரிடம் அத்துமீறல்.. விஜய் பவுன்சருக்கு சரமாரி அடி : வீடியோ வைரல்!
இந்த திருமணங்களை எல்லாம் விஜய் டிவி வியாபார ரீதியாக பார்க்கிறது. பிரியங்கா மற்றும் பாவனி திருமணத்தை நிகழ்ச்சியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்து வருகிறது.
இதனிடையே பிரபல தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்சினி 2வது திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2வது திருமணம் குறித்து தகவல் பரவிய போது எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் டிடி.
தற்போது ஒரு பிரபல தயாரிப்பாளரை டிடி திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. 2014ல் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்த டிடி, சில மாதங்களிலேயே விவாகரத்து செய்தார்.
2வது திருமணம் குறித்து தகவல் வெளியானது குறித்து இதுவரை எதுவும் சொல்லாத டிடி, இந்து முறை விளக்கம் அளிப்பாரா இல்லை மவுனத்தை பதிலாக சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.