ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்- ஜனநாயகன் விஜய் கதாபாத்திரத்தின் பெயரில் உள்ள சூட்சமம்? 

Author: Prasad
6 May 2025, 3:20 pm

கடைசித் திரைப்படம்

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை முடித்துவிட்டு அதன் பின் தமிழகம் முழுவதும் விஜய்  சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

vijay character name in jana nayagan leaked in internet

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாளில் இருந்து தனது அரசியல் எதிரியையும் கொள்கை எதிரியையும் மிகவும் காட்டமாக விமர்சித்து வருகிறார் விஜய். இதனால் இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் விஜய்யை பதிலுக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஒரு நிலை போய்க்கொண்டிருக்கும் வேளையில் “ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. 

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்

அதாவது “ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய் ஏற்று நடித்து வரும் கதாபாத்திரத்தின் பெயர் வெற்றிக்கொண்டான் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தில் அவரை பலரும் தளபதி என்றே அழைப்பார்களாம்.

vijay character name in jana nayagan leaked in internet

இதன் மூலம் “ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய்யின் பெயர் தளபதி வெற்றிக்கொண்டான் என தகவல் வெளிவருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் விஜய் தனது கையில் தனது பெயரை TVK என பச்சை குத்தியிருக்கிறாராம். தளபதி வெற்றிக்கொண்டான் என்ற பெயரில் தளபதி என்ற பெயரின் முதல் ஆங்கில எழுத்தான “T”, வெற்றிக்கு முதலில் வரும் ஆங்கில எழுத்தான “V”, கொண்டான் என்ற பெயரின் முதல் ஆங்கில எழுத்தான “K” என மூன்றையும் சேர்த்து TVK என தனது கையில் பச்சை  குத்தியிருக்கிறாராம். இவ்வாறு ஒரு தகவல் பரவி வருகிறது. 

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?
  • Leave a Reply