சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2025, 5:02 pm
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் இணைந்த நடித்த போது காதலில் விழுந்தனர். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமணமும் ஜாம் ஜாம் என்று நடந்தது.
ஆனால் சில வருடங்களிலேயே இந்த ஜோடி பிரிந்தது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா மீது தவறில்லை, முட்டுக்கட்டை போட்டது நாக சைதன்யாவும் அவரது குடும்பத்தினரும் என பரவலாக பேசப்பட்டது.
இதையும் படியுங்க: வீட்ல விசேஷம்… மகிழ்ச்சி செய்தியை அறிவித்த நட்சத்திர ஜோடி!
இருவரும் விவாகரத்து குறித்து எந்த காரணமும் சொல்லாத நிலையில், தனித்தனியே பயணத்தை தொடங்கினர். ஒரு பக்கம் சமந்தா சினிமாவில் நடிப்பது நாகர்ஜூனா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து நாகசைதன்யா நடிகை சோபிதா உருகி உருகி காதலித்தார். சமந்தாவே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார்.
நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கு ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. இருவரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றனர். இதற்கு நாகர்ஜூனா குடும்பம் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது சமந்தா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் சமந்தா மெல்ல மெல்ல நோயில் இருந்து விடுப்பட்டு தற்போது கிளாமர் அதிகமாக காட்டி நடித்து வருகிறார். இந்த நிலையில் சோபிதா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது.

மேலும் அவர் பொதுவெளியில் வந்த போட்டோவும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டன. ஆனால் இது குறித்து நாகர்ஜூனா குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கூறும் போது, அந்த உடை அப்படி, சோபிதா கர்ப்பமாக இல்லை என விளக்கமளித்துள்ளார்.