நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

Author: Prasad
6 May 2025, 6:44 pm

தென்னிந்தியாவின் டாப் நடிகை

தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து தனது விடாமுயற்சியால் தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார். 

samantha explains about crying in stage

மையாசிட்டீஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள சமந்தா தான் மேடையில் கண்கலங்கியது குறித்து பேசியுள்ளார்.

நான் கண்கலங்கவில்லை…

samantha explains about crying in stage

சில வருடங்களுக்கு முன்பு சமந்தா ஒரு விழாவில் கண்கலங்கிய வீடியோ ஒன்று வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ள சமந்தா, “மேடைகளில் நான் கண்களை துடைப்பதற்கு காரணம் நான் அழுவதனால் அல்ல. அதிக வெளிச்சத்தை பார்த்தால் எனக்கு கண்களில் கண்ணீர்  வந்துவிடும். மற்றபடி நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என கூறியுள்ளார். 

  • prakash raj criticize vijay and acting in jana nayagan movie விஜய் முகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? ஜனநாயகன் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜிற்கு வந்த சங்கடம்!
  • Leave a Reply