சாட்டையை சுழற்றுவேன் சுழற்றுவேன் என CM சொன்னார்.. ஆனால் சுழற்றியவர் PM : செல்லூர் ராஜு!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2025, 2:36 pm

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக் கூடாது. தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி துணிந்து நின்று, எந்த ஒரு பிரதமரும் எடுக்காத இராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்தியாவின் முன்னெடுப்புக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

முதலில் இவர்கள் நடத்தும் பள்ளிகள், முதல்வரின் மகள் நடத்தும் பள்ளிகளில் தமிழில் நடத்த சொல்லுங்கள். திமுக ஸ்டாலின் வீட்டிற்கு சாமியார்கள் வரலாம், முதல்வர் ஸ்டாலின் மனைவி சாமி கும்பிடுகிறார்.

திமுகவினர் செய்தது எல்லாம் சாதனை தான் ஆனால்., மக்களுக்கு தான் வேதனை. திமுகவில் உள்ள குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் சாதனையைத் தவிர மற்றவர்களுக்கு வேதனை.

இன்றைக்கு பல அமைச்சர்கள் மீது ED ரைடு நடத்தப்படுகிறது. அவர்கள் மீது நீதிமன்றம் குற்றம் சாட்டுகிறது. இந்த ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. அனைவரும் இந்த ஆட்சியை வெறுக்கிறார்கள்.,

கரண்ட் கட் வருகிறது. மின் கட்டணம் உயர்ந்து வருகிறது. நாளை சித்திரை திருவிழாவில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால் இந்த முதலமைச்சர், மாவட்ட நிர்வாகமும், காவல் துறை தான் பொறுப்பு. எங்கள் ஆட்சி காலத்தில் சித்திரை திருவிழாவில் எந்த ஒரு துயர சம்பவமும் நடைபெறவில்லை.

திமுக ஆட்சியில் சித்திரை திருவிழா குறிப்பிட்டவர்களுக்காக நடக்கிறது. அவர்களின் தேவைக்காக பக்தர்களை பாடாய்படுத்துவார்கள். மாவட்ட நிர்வாகம் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள். மக்கள் எல்லாம் நீங்கள் தான் தலைவர் என சொல்ல வேண்டும்.

தினமும் காலையில் சேவல் கூவத்தான் செய்யும். சேவல் கூவுவதைப் போல 2026 தேர்தலில் திமுக தான் வெற்றியை பெரும் முதலமைச்சர் கூவி வருகிறார்.

பொன்முடி ஓசி ஓசி என்று பேசிய போதை அவரை நீக்கி சாட்டையை சுழற்றி இருக்க வேண்டும். நீங்கள் சாட்டையை சுழட்டுவேன் என கூறினார் எங்கே சுலட்டினார்.? இன்று தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி சாட்டையை சுழற்றி உள்ளார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?
  • Leave a Reply