தண்டவாளத்தில் கல்லூரி மாணவர்கள் செய்த செயல்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி : 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்.!
Author: Udayachandran RadhaKrishnan8 May 2025, 9:33 am
கோவை வடகோவை – பீளமேடு ரயில் நிலையங்கள் இடையே உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள தண்டவாளத்தில் கற்களை வைத்தும், ரயில் மீது கற்களை வீசிய 18 வயது நிரம்பாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கைது.

கல்லூரி பயின்று பகுதி நேரம் வேலைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கழிவறைக்குச் சென்ற நிலையில் அங்கு தண்டவாளத்தில் கற்களை வைத்து உள்ளனர்.

ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் கல்லூரி மாணவர்களிடம் ரயில்வே காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.