இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் அசத்தல் மார்க் : கண்ணீர் கோரிக்கை.. முதல்வர் உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2025, 4:14 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுவயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த மாணவன் கீர்த்தி வர்மா படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் படங்கள் வரைவதிலும் இவர் கைதேர்ந்தவராக இருந்தார்.

இதையும் படியுங்க: நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மூடல்… முன்பதிவு செய்தவர்களுக்கு கவலை வேண்டாம்!

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவன் கீர்த்தி வர்மா 437 மதிப்பெண் பெற்று தான் படித்த பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தார். இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

இந்நிலையில் இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய கீர்த்தி வர்மா 471 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆசிரியர்களின் துணையோடு தேர்வு எழுதிய மாணவன் 471 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து பேசிய மாணவன் கீர்த்தி வர்மா அடுத்ததாக பி. இ.படிக்க ஆசைப்படுவதாகவும், அதற்கு அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் மேலும் இரண்டு கைகளை இழந்த தனக்கு, கைகளை பொருத்த தமிழக முதல்வர் தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும், தாயின் அரவணைப்பில் வாழும் தனக்கு அரசு முன்வந்து உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

Amazing marks from a disabled student who lost both hands: Tearful request

இதையடுத்து இந்த வீடியோவை வைரலான நிலையில், முதலமைச்சரின் கவனத்துக்கு சென்றது. இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணயின் உங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிப்பார், கவலை வேண்டாம் என கூறியுள்ளார்.

  • some netizens criticizing that suriya donate 10 crore to agaram because of negative review for retro மக்களை திசைதிருப்ப சூர்யா போட்ட பிளான்? பத்து கோடி கொடுத்ததுக்கு காரணம் இதுதானா?
  • Leave a Reply