பாகிஸ்தானுக்கு உதவாதீங்க; கம்முனு இருங்க- நெட்டிசன்களை பார்த்து எச்சரிக்கும் ராஜமௌலி

Author: Prasad
9 May 2025, 5:11 pm

ஆபரேஷன் சிந்தூர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானும் இதற்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் தாக்குதல் பதிவான வீடியோக்களை பெருமையாக பகிர்ந்து வருகின்றனர். அதில் பல போலியான வீடியோக்களே இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் பிரபல இயக்குனரான ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

எதிரிக்கு உதவாதீங்க

“இந்தியா இராணுவத்தின்  நடமாட்டத்தை நீங்கள் காண நேர்ந்தால் அதனை  வீடியோவோ அல்லது புகைப்படமோ எடுக்க வேண்டாம். அதனை ஷேர் செய்யவும் வேண்டாம். ஏனென்றால் அவை எதிரிக்கு உதவுவதாக கூட அமையலாம். சரிபார்க்கப்படாத செய்திகளை பகிரவேண்டாம். எதிரி விரும்பக்கூடிய சத்தத்தைதான் நீங்கள் உண்டு செய்வீர்கள். 

ss rajamouli shared about sharing unverified war photos and videos

அமைதியாக இருங்கள், விழிப்போடு இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நமதே” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?
  • Leave a Reply