யார் இந்த கெனிஷா? இவருக்கும் ரவி மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி? ஒரு குட்டி ஸ்டோரி…
Author: Prasad10 May 2025, 1:52 pm
ரவி மோகனின் புதிய காதலி?
ரவி மோகனும் அவரது மனைவியாக இருந்த ஆர்த்தியும் கடந்த 2024 ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர். ஆர்த்தியின் தாயாரான சுஜாதா விஜயகுமார் ரவி மோகனின் கால்ஷீட்டை முடிவு செய்வதாகவும் தன்னுடைய சமூக வலைத்தள கணக்குகளை முடக்குவதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. அவரின் தொல்லை காரணமாகத்தான் ஆர்த்திக்கும் ரவி மோகனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் மறுபக்கம் கெனிஷா என்ற பாடகியுடன் ரவி மோகன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாகவும் ஆதலால்தான் ஆர்த்திக்கும் ரவிமோகனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் ரவி மோகன் தான் கெனிஷாவுடன் நட்பாக மட்டுமே பழகி வருவதாக கூறினார். ஆனால் நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில் ரவி மோகனும் கெனிஷாவும் ஜோடியாக கலந்துகொண்டனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் காதலித்துதான் வருகிறார்கள் என ரசிகர்களிடம் பேச்சுக்கள் அடிபட்டது.
இந்த நிலையில் யார் இந்த கெனிஷா? இவரும் ரவி மோகனும் எப்படி சந்தித்துக்கொண்டார்கள் என்பது குறித்தான ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
ஹீலர் தெரபிஸ்ட்
கெனிஷாவின் முழுப்பெயர் கெனிஷா பிரான்சிஸ். இவர் அடிப்படையில் ஒரு ஹீலர் தெரபிஸ்ட். அதாவது உளவியல் நிபுணர். மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களை குணப்படுத்துபவர். ஆனால் ஒரு பக்கம் பாடல், நடனம் போன்றவற்றையும் கற்றுக்கொண்டாராம்.
ஒரு பக்கம் மேடை பாடகியாகவும் அதே சமயம் மறு பக்கம் ஹீலர் தெரபிஸ்டாகவும் தனது கெரியரை அமைத்துக்கொண்டார். இப்படி இருக்க ஒரு நாள் ரவி மோகன் தான் மன அழுத்தத்தில் உள்ளதாக கூறி கெனிஷாவிடம் சிகிச்சைக்காக வந்தாராம். அவ்வாறுதான் இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டார்களாம்.
அதன் பின் இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினராம். குறிப்பாக கெனிஷா சொந்தமாக கிளினிக் தொடங்குவதற்கு ரவி மோகன் உதவி செய்தாராம். இவ்வாறுதான் இருவரும் பழகத்தொடங்கினர் என கூறப்படுகிறது. ரவி மோகன் கெனிஷாவிடம் ஹீலர் தெரபிக்கு வந்ததே அவரது மாமியார் கொடுத்த தொல்லையால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால்தான் எனவும் கூறப்படுகிறது.