இளம் நடிகையை போடுங்க.. கறார் காட்டிய தனுஷ் : இணையும் புது ஜோடி..!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2025, 1:26 pm
தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் இயக்கதத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மீது என்னடி கோபம் படம் தோல்வியடைந்தது.
இதையடுத்து இட்லி கடை படத்தை இயக்கி வரும் தனுஷ், தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இட்லி கடை, குபேரா, tere ishq mein என்ற இந்தி படத்திலம் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க: குட் பேட் அக்லி செம கலெக்சன், ஆனா நஷ்டம்? குட்டையை குழப்பிய பிரபலம்
இதையடுத்து இயக்குநர் விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா போர் தொழில் படம் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் இளம் நடிகையை ஹீரோயினாக போட வேண்டும் என தனுஷ் கூறியதால், 23 வயது இளம் நடிகையான மமிதா பைஜூ இணைந்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.