செல்லூர் ராஜூ உருவபொம்மை எரிப்பு.. மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் என அறிவிப்பு : என்ன நடந்தது?
Author: Udayachandran RadhaKrishnan12 May 2025, 5:49 pm
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா சாலை பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் தமிழக ஒருங்கிணைந்த முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீரமங்கை சங்கத்தை சேர்ந்த ஜி ஆர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜின் உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்… கோவையில் பகீர் சம்பவம்!!
பாகிஸ்தான் மீது நடைபெற்று வரும் ஆப்ரேஷன் செந்தூர் தாக்குதல் குறித்து இந்திய ராணுவ வீரர்கள் குறித்து அவதூராக விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான செல்லூர் ராஜுவின் உருவ பேனரை ஊர்வலமாக எடுத்து வந்து செருப்பால் அடித்து உருவ படத்தை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் முன்னாள் படை வீரர்கள் கூறுகையில் ராணுவ வீரர்களை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்கும் வரை தமிழகம் முழுவதும் அங்கங்கே உள்ள ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்துவார்கள் என முன்னாள் படை வீரர்கள் சங்கத்தை சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி ஆர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.