சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி அதிரடி!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2025, 1:47 pm
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படியுங்க: தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு… சாகும் வரை சிறையா?
2019இல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல பெண்கள் மோசடியாக கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, வீடியோ பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது கோவை மகிளா நீதிமன்றம்.
மேலும் தண்டனை விபரங்கள் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, A2 குள்ளவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை, A3 குற்றவாளி சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை, A4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை, A5 குற்றவாளி மணிவண்ண 5 ஆயுள் தண்டனை, A6 பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, A7 குற்றவாளி ஹேரன் பால் 3 ஆயுள் தண்டனை, A8 அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை, A9 குற்றவாளி அருண் குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் உடனே இந்த தண்டனையை ஏக காலத்துக்கு அனுபவிக்க வேண்டும் என நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சத்தை பகிர்ந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, A1 சபரிராஜன் ரூ.40,000, A2 திருநாவுக்கரசு ரூ.30,500, A3 சதீஷ் ரூ.18,500, A4 வசந்தகுமார் ரூ.13,500, A5 மணிவண்ணன் ரூ.18,000, A6 பாபு ரூ.10,500, A7 ஹெரான் பால் ரூ.14,000, A8 அருளானந்தம் ரூ.5,500, A9 அருண்குமார் ரூ.5,500 அபராதத்தை நீதிபதி விதித்தார்.