விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2025, 2:26 pm
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை உதறி தள்ளிவிட்டு அரசியலில் நுழைவதாக அறிவித்தார்.
தொடர்ந்து தனது கட்சியை அறிமுகம் செய்து வைத்த அவர், மாநாட்டையும் நடத்தி அரசியல் கட்சிகளை அதிர விட்டார். தற்போது திமுக, பாஜகவுக்கு எதிரான கொள்கையை கொண்ட விஜய், தனது கடைசி படம் என ஜனநாயகன் படத்தை அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் : பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து!
ஜனநாயகன் 2026ல் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி களமிறங்க உள்ளது

இதனிடையே விஜய்க்கு எதிராக திரைத்துறையை சேர்ந்த சிலர் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், விஜய்க்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன் என கூறியுள்ளார் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் நடிகை வாணி போஜன்.
முதல் தடவ நான் தான் சொன்னேன்…ஏன் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்ககூடாது என்று.
— 𝗩𝗧𝗠ᵀⱽᴷ (@VTMOffl) May 13, 2025
ஊட்டில அவருக்குகாக பிரச்சாரம் பண்ண போறேன் 🤯 Actress – வாணிபோஜன்
pic.twitter.com/mRzIaVej4k
விஜய் அரசியலுக்கு வரும் போதே நான் வரவேற்றேன், தற்போது அவர் கட்சியில் இணைந்து ஊட்டியில் பிரச்சாரம் செய்வேன் என சினிமா சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.