ஜிபி முத்து ஒழிக- கோயில் விவகாரத்தில் கோஷம் போட்ட மக்கள்! லெஃப்ட் ஹேண்டால் டீல் செய்யும் பிரபலம்…

Author: Prasad
14 May 2025, 3:47 pm

டிக்டாக் பிரபலம்

டிக்டாக் செயலியின் மூலம் பல ரீல்ஸ் செய்து தமிழக இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமாக ஆனவர் ஜிபி முத்து. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், டிக்டாக் செயலியின் மூலம் மிகப் பிரபலமானதை தொடர்ந்து இவருக்கு தொலைக்காட்சிகளில் தோன்றும் வாய்ப்புகளும் அதிகம் வந்தது. குறிப்பாக “பிக்பாஸ்”, “குக் வித் கோமாளி” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இவருக்கு மிக நல்ல பெயர் உண்டு. 

villagers protest against gp muthu in temple issue

பரபரப்பு புகார்

ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்ற ஊரில் பெருமாள்புரம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்று ஒரு தெரு இருந்தது எனவும் அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து தற்போது கோவில் கட்டி வருவதாகவும் தகுந்த ஆவணங்களுடன் வந்து முறையிட்டிருந்தார். 

villagers protest against gp muthu in temple issue

இந்த நிலையில் இன்று ஊர் மக்கள் பலரும் ஜிபி முத்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி கோவில் கட்டுவதற்கு இடையூறாக இருக்கிறார் என கூறி அவரை எதிர்த்து அவரது வீட்டை முற்றுகை இட முடிவெடுத்தனர். இந்த தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த சமயத்தில் ஜிபி முத்துவும் சம்பவ இடத்திற்கு வர ஊர் மக்களுக்கும் ஜிபி முத்துவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. 

அதனை தொடர்ந்து ஜிபி முத்து ஒழிக என ஊர் மக்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். ஜிபி முத்து கோவிலுக்குச் சொந்தமான இடத்தை சொந்தமாக  கேட்டதாகவும் அதை அவருக்கு வழங்காத நிலையில்தான் இவ்வாறு பொய் குற்றச்சாட்டை பரப்புகிறார் எனவும் ஊர் மக்கள் கூறுகின்றனராம். 

  • pradeep ranganathan dude title have trouble பிரதீப் ரங்கநாதன் பட தலைப்புக்கு வந்த சிக்கல்? ஸ்டார்ட்டிங்லயே End Card போட்டாங்களே?
  • Leave a Reply