திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்.. அரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் அடாவடி!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2025, 10:58 am

நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ சங்கர் வயது45. இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக இருக்கிறார்.

இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் திமுக கவுன்சிலராக பதவியில் உள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை இவரது வீட்டு முன்பு வாலிபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையும் படியுங்க: நந்தினி வீசிய வலை… ஓடிப்போய் கல்யாணம் செய்த 28 வயது டாக்டர் : ரூ.5 லட்சம் அபேஸ்!

முன்னீர் பள்ளம் காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து இதே கும்பல் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள தனியார் பைக் ஷோரூம் வாசலிலும் பெட்ரோல் குண்டை வீசி சென்றது தொடர் விசாரணையில் தெரிந்தது.

அதைத்தொடர்ந்து இந்த கும்பல் நால்வரும் நேற்று இந்த சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்பாக நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு முகமூடி அணிந்து சென்று அங்குள்ள ஊழியரை அரிவாளை காட்டி மிரட்டி தாக்கி இலவசமாக பெட்ரோல் போட வைத்துள்ளனர்.

தற்பொழுது இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது அதை பங்க் நிர்வாகத்தினர் தற்பொழுது வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது.

A mob threw a petrol bomb at a DMK councilor's house.. brandished a sickle and attacked a petrol pump

இதை அடுத்து இந்த நால்வரை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது டவுன் மேல நத்தம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ், பொன்னா குடியைச் சேர்ந்த கார்த்தி, முன்னீர் பள்ளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து உட்பட 4 பேர் என தெரிந்தது.

கூடுதல் விசாரணையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே தளபதி சமுத்திரம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியரிடமும் இவர்கள் மிரட்டி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.

இந்த மிரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது நெல்லை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Bigg Boss celebrity cries over parents' lack of discipline அம்மா தினமும் சரக்கு அடிப்பாங்க.. அப்பாடி குடியால் செத்து போனாரு : கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்!
  • Leave a Reply