போலி கையெழுத்து போட்டு அங்கீகாரம் இல்லாத மனையை வரன்முறை செய்த பெண்.. கோவை மாநகராட்சியில் தில்லு முல்லு!
Author: Udayachandran RadhaKrishnan15 May 2025, 1:18 pm
கோவை மாநகராட்சியில் போலியாக கையெழுத்திட்டு அங்கீகாரம் அற்ற மனையை வரன்முனை செய்த விவகாரத்தில் பெண் இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கோவை, மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் தெற்கு என ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் உள்ள உதவி ஆணையாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர் ஆகியோரின் கையெழுத்துக்களை போலியாக போட்டு அங்கீகாரம் மற்ற மனையை வரன்முறை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளராக இருப்பவர் முத்துசாமி, உதவி நகரமைப்பு அலுவலராக இருப்பவர் புவனேஸ்வரி.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களின் கையெழுத்தை போட்டு அங்கீகாரம் பெற்ற மனையை வரன்முறை செய்து உத்தரவு வழங்கப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்க: அண்ணாமலைக்கு பதவி.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு : நயினார் நாகேந்திரன் தகவல்!
மேலும் இந்த உத்தரவை ஆதாரமாக வைத்து உள்ளூர் திட்ட குழும அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பித்து கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் சமர்ப்பித்த ஆவணங்களை சரி பார்த்த போது வரன்முறை செய்ததற்கான உத்தரவில் இருந்தது போலி கையெழுத்து என்பது தெரிய வந்தது.
இதை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் உத்தரவின் பேரில் அந்த உத்தரவை தயாரித்து விநியோகித்தது யார் ? உயர் அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டது யார் ? என்பது தொடர்பாக கிழக்கு மண்டல நகரமைப்பு அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அத்துடன் போலி கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உத்தரவு தொடர்பான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் தணிக்கை தடை தொடர்பான கோப்பு ஒன்றை சரி செய்வதற்கு உதவி ஆணையர் கையெழுத்தை போலியாக போட்டு ஒரு உத்தரவு வழங்கி இருப்பதும், விசாரணையில் தெரியவந்தது.
இதனால் போலி கையெழுத்தை போட்டு உத்தரவு வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில் கிழக்கு மண்டலம் உதவி நகரமைப்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளநிலை உதவியாளர் சந்தியா என்பவர் நேற்று திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் கேட்டபோது:கடந்த 2024 ஆம் ஆண்டு அசல் ஆவணங்கள் வந்து உள்ளது. இந்த ஆவணங்களை இளநிலை உதவியாளர் சந்தியா என்பவர் தான் கையெழுத்திட்டு உள்ளார். எனவே அவர் இருக்கும் போது யாரோ ? போலியாக கையெழுத்து போட்டு உள்ளனர். எனவே இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடியும் வரை சந்தியா பணியிட நீக்கத்தில் நீடிப்பார் என்று கூறியுள்ளார்.
