ஆண்கள் மீது சுத்தமா நம்பிக்கை இல்ல… மாலைமாற்றி திருமணம் செய்த பெண்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2025, 4:40 pm

இன்றைய காலக்கட்டங்களில் ஓரினச்சேர்க்கை என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய சட்டம் அங்கீகரிக்காவிட்டாலும், இரு பெண்கள் ஒன்றாக வாழ்வது, ஆண்கள் இருவர் திருமணம் செய்து அன்றாட நிகழ்வாகிவிட்டது.

அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் குழந்தை பராமரிப்பு மையத்தில் வேலை செய்து வந்த ஆஷா என்ற கோலுவுக்கு வயது 27. அதே போல புடான் சிவில் லைன் பகுதியல் வசித்து வந்த ஜோதிக்கு 29 வயது.

இதையும் படியுங்க: சீமான் ஆஜராகமாட்டாரா? அவருக்கு இதுதான் கடைசி வாய்ப்பு : நாள் குறித்த நீதிமன்றம்!

இருவரும் 3 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் பணிபுரிந்த போது நட்பு ஏற்பட்டது. இருவரும் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்போது தங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை பகிர்ந்து கொண்டனர்.

நாளுக்கு நாள் நெருங்கிய தோழிகளாக மாறிய இவர்கள், எங்கு சென்றாலும் ஒன்றாக செல்ல துவங்கினர். பிடித்த இடத்துக்கு சென்று உல்லாசமாக இருந்தனர்.

இந்த நெருக்கம் இருவருக்குள் காதலாக மாறியது. ஏன் இரண்டு பேரும் திருமணம செய்து கொள்ளக்கூடாது என கேள்வியை கேட்டுக்கொண்டனர். இரு தரப்பு பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில், வழக்கறிஞருடன் உத்தரபிரதேசம் பரேலி மாவட்டத்தில் நீதிமன்றம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

2 UP Womens Married

இது குறித்து அவர்கள் கூறும் போது, எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது, அதனால் தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். யார் எங்களை பற்றி என்ன பேசினாலும் கவலையில்லை. எங்களுக்கு பிடித்துள்ளது, திருமணம் செய்துகொண்டோம், பெற்றோர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் என நம்பிக்கை உள்ளது. எங்களை அவர்கள் நிராகரித்தாலும் டெல்லி சென்று ஒன்றாக வாழ திட்டமிட்டுள்ளதாக கூறினர்.

  • blue sattai maran troll surya sethupathi acting in phoenix movie ஆடியன்ஸ் கண் முன்னாடியே திமிருத்தனமா? சூர்யா சேதுபதியை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!