வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ? ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் செய்யும் விநோத காரியம்! ஏன் இப்படி?

Author: Prasad
15 May 2025, 7:06 pm

அரசியலில் விஜய்

விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முடிவடையவுள்ளது. அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக விஜய் களமிறங்கவுள்ளார். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக வருகிற ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் “ஜனநாயகன்” படப்பிடிப்பில் விஜய் மிகவும் விநோதமாக நடந்துகொள்வதாக ஒரு தகவல் வெளிவருகிறது.

vijay actions are different in jana nayagan movie shooting spot

அமைதியா இருப்போம்…

இதற்கு முந்தைய திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் விஜய் கொஞ்சமேனும் சக நடிகர்களுடனும் டெக்னீஷியன்களுடனும் கலகலவென்று பேசுவாராம். ஆனால் “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருக்கிறாராம். அது மட்டுமல்லாது ஒரு காட்சியில் நடித்துமுடித்துவிட்டு அடுத்த காட்சிக்கான இடைவேளை வரும்போது அவரை சுற்றி பவுன்சர்கள் சூழ்ந்துகொள்கிறார்களாம். இது அத்திரைப்படத்தில் பணியாற்றுபவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். விஜய் அரசியலுக்குள் நுழைந்த பிறகே இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சிலர் விமர்சிக்கின்றனராம். 

  • siddharth 3bhk movie twitter review வீட்டை நல்லாதான் கட்டிருக்காங்க, ஆனால்? 3BHK படத்தை பார்த்து எகிறும் ரசிகர்கள்!