தக் லைஃப் டிரெயிலர் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுப்பு? அப்போ ரசிகர்களோட நிலைமை?

Author: Prasad
15 May 2025, 7:59 pm

தள்ளிப்போன வெளியீட்டு விழா

இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று இத்திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்தான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

அதன் படி இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா வருகிற 17 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கமல் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. 

ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

“தக் லைஃப்” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா வருகிற 17 ஆம் தேதி மகாபலிபுரத்தில் அமைந்துள்ள ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளதாம். இந்த விழாவிற்கு இந்தியா முழுவதும் உள்ள சமூக வலைத்தளத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் 400 பேரை அழைத்து வருகிறார்களாம். இத்திரைப்படத்தை குறித்து அவர்களை தனி தனியாக பேச வைத்து அதனை அவரவர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்ற திட்டமிட்டுள்ளார்களாம். ஆதலால் ரசிகர்கள் எவருக்கும் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் அனுமதி கிடையாது என்று தகவல்கள் தெரிவிக்கின்ன்றனவாம். 

fans are not allowed for thug life trailer launch function

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடித்துள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோருடன் திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், சான்யா மல்ஹோத்ரா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • soori angry on his fans who ate sand rice in madurai temple தம்பிங்கனு சொல்றதுக்கே வெட்கமா இருக்கு, இது முட்டாள் தனம்- ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பான சூரி…
  • Leave a Reply