என்கிட்ட ஏன் கேட்கறீங்க…போய் ப.சிதம்பரத்திடம் கேளுங்க : நிருபர்களிடம் கோபப்பட்ட அமைச்சர் கேஎன் நேரு!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2025, 11:46 am

திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ₹.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க: உடம்பெல்லாம் கடிச்சு வைக்கிறான்.. திமுகவினருக்கு இரையாக்க முயற்சி : திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கதறிய மாணவி!

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாரீஸ் மேம்பால பணிகள் ரயில்வே நிர்வாகத்தால் கால தாமதம் ஆகி வருகிறது. தற்போது 90சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் 6 மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியுள்ளனர். அதேபோல ஜங்சன் அரிஸ்டோ மேம்பால பணிகளும் விரைவில் முடிவடையும்.

மெட்ரோ ரயில் சேவை கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் முதலில் அமைய உள்ளது. திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை வழங்குவதற்கு சர்வே எடுப்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளனர்.

திருச்சி ஜங்சன் பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை elivated highway அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசு 6வழி சாலையாக பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை (elivated highway, அமைப்பதற்கும், கரூர் சாலையில் இருந்து துவாக்குடி வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்றார்.

Why are you asking me...go ask P. Chidambaram: Minister KN Nehru gets angry

தொடர்ந்து பாஜக கூட்டணியை போல, இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என சிதம்பரம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

  • aarti ravi mother sujataa vijay kumar denied the complaints of ravi mohan சைலன்ட்டா இருந்தா வேலைக்கு ஆகாது! ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மாமியார்?
  • Leave a Reply