சூரியா? சந்தானமா? முதல் நாள் வசூலை போட்டி போட்டு அள்ளிக்குவித்தது யார்? கலெக்சன் ரிப்போர்ட்…
Author: Prasad17 May 2025, 1:26 pm
சூரி vs சந்தானம்
சூரி சந்தானம் ஆகிய இருவரும் எளிமையான பின்னணியில் இருந்து சினிமாவுற்குள் வந்தவர்கள். கோலிவுட்டின் காமெடி உலகில் இரு வேறு உலகில் பயணித்தவர்கள் இவர்கள். தற்போது இருவருமே கதாநாயகனாக ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் இருவரும் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் நேற்று ஒரே நாளில் வெளிவந்தது.

சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படமும் சூரி கதாநாயகனாக நடித்த “மாமன்” திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியாகின. “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் முழுக்க முழுக்க ஹாரர் காமெடி என்ற வகையில் உருவான திரைப்படம் ஆகும். “மாமன்” திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமன்ட் திரைப்படமாகும்.
மக்களின் கருத்து என்ன?
இதில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தில் காமெடி காட்சிகள் அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே விமர்சனங்கள் வெளிவருகின்றன. மறுபுறம் சூரியின் “மாமன்” திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸிடயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “மாமன்” திரைப்படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.1.75 கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் சந்தானத்தின் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் அதிகளவு கூட்டம் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.