நாயகன் படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க.. இப்ப வரைக்கும் கமல் கூட நடிக்கல : பிரபல நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2025, 2:12 pm
கமல்ஹாசன் கூட நடிக்க தயங்க நினைக்கும் நடிகைகள் மத்தியில் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பியுள்ளார் பிரபல நடிகை.
இதையும் படியுங்க: சூரியா? சந்தானமா? முதல் நாள் வசூலை போட்டி போட்டு அள்ளிக்குவித்தது யார்? கலெக்சன் ரிப்போர்ட்…
அவர் வேறு யாருமில்லை, நடிகை சுஹாசினி தான். இவர் இயக்குநர் மணிரத்னத்தை காதலித்து கரம் பிடித்தார். தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், மணிரத்னம் இயக்கிய படங்களில் தான் நடிக்க வில்லை அதேோல கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை என கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பல்லவி அனு பல்லவி படத்தில் என்னை நடிக்க கேட்டார்,நான் ஓகே சொல்லவில்லை. காரணம் லட்சுமி இருக்கும் போது எனக்கு அந்த படத்தில் என்ன முக்கியமான ரோல் இருக்க போகிறது என தவிர்த்தேன்.

பின்னர் அஞ்சலி படத்தில் ரேவதிக்கு பதில் நான் நடிக்க இருந்தேன். பின்னாளில் அதிலும் நடிக்க முடியவில்லை. கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது

ஆனால் அதுவும் முடியவில்லை. கன்னடத்தில் ஒரு படத்தில் அவருடன் நடித்துள்ளேன். நாயகன் படத்தில் கமலின் மகளாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் புதுமுகம் தேவை என்பதால் நான் நடிக்க முடியாமல் போனது, கமல் எனக்கு சித்தப்பா என்றாலும் நான் அண்ணா என்று தான் அழைப்பேன் என கூறியுள்ளார்.