சிவாஜியுடன் நடிக்க வேண்டிய படம்… வாய்ப்பை தவற விட்ட சூப்பர் ஸ்டார்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2025, 2:42 pm

சிவாஜியுடன் அன்றைய காலம் முதலே உடன் சேர்ந்து நடிக்க போட்டா போட்டி ஏற்படும். நடிப்பு சக்கரவர்த்தியுடன் போட்டி போட்டு நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

ஆனால் சிவாஜியுடன் நடிக்க வாய்ப்பு வந்த போது, அதை மறுத்துள்ளார் கேரள மெகா ஸ்டார் மம்முட்டி. கேஎஸ் ரவிக்குமார் இயக்கினாலே படம் வெற்றிதான் என ஒருகாலத்தில் பேசப்பட்டது.

இதையும் படியுங்க: நாயகன் படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க.. இப்ப வரைக்கும் கமல் கூட நடிக்கல : பிரபல நடிகை!

இவர் இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். அப்படி 1998ல் வெளியான படம் தான் நட்புக்காக. உண்மைக்கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் முதலில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் சிவாஜி கணேசன்.

கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்ட சிவாஜி, தனக்கு இணையான நடிகரை தேர்வு செய்யும் வரை காத்திருந்தார். ஆனால் படத்தில் கமிட் ஆனவர்கள் கால்ஷீட் பிரச்சனையால் விலகினர்.

The film that was supposed to star with Sivaji… The superstar missed the opportunity..!!

இறுதியில் அந்த வாய்ப்பு மம்முட்டிக்கு கிடைத்தது. அவர் என்ன நினைத்தார் என தெரியவில்லை வாய்ப்பை வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் சிவாஜியும், தனக்கு இணையான நடிகர்கள் தேர்வு இல்லை என விலகினார்.

Sivaji and Mamootty

இதையடுத்து, தனக்கு ஆஸ்தான நடிகர்களான சரத்குமார் மற்றும் விஜயகுமாரை தேர்வு செய்தார் கேஎஸ் ரவிக்குமார். கதாநாயகி வாய்ப்பும், மீனா, சௌந்தர்யாவை தேடிப் போக கால்ஷீட் பிரச்சனையால் அவர்களும் விலக, புதுவரவான சிம்ரன் ஜோடி சேர்ந்தார்.

இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சிறந்த படத்துக்கான பிலிம்ஃபேர் விருது மற்றும் தமிழக அரசின் விருதுகளையும் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

  • tiruppur subramaniam shared the discussion to rb choudary about vijay movie விஜய்யை வைத்து தயவுசெய்து படம் எடுக்காதீங்க- தயாரிப்பாளரின் காதில் ஓதிய பிரபலம்! இதான் காரணமா?
  • Leave a Reply