ஆள் வைத்து பேரம் பேசிய ரவி மோகன்- யூட்யூபரை தன் வசம் இழுக்க செய்த சதி! அடக்கொடுமையே…
Author: Prasad19 May 2025, 12:03 pm
ரவி மோகன்-ஆர்த்தி விவகாரம்
கடந்த சில நாட்களாகவே ரவி மோகன், கெனிஷா, ஆர்த்தி ரவி ஆகிய மூன்று பெயர்கள்தான் சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் நிறைந்து கிடக்கிறது. ஆர்த்தியை பிரிந்த பின் ரவி மோகன் சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷ் வீட்டுத் திருமண விழாவில் கெனிஷாவுடன் கலந்துகொண்டதுதான் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியது.
ரவி மோகனும் கெனிஷாவும் ஜோடியாக வலம் வந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக ஆர்த்தியிடம் இருந்து ஒரு ஆதங்கப் பதிவு அறிக்கையாக வெளிவந்தது. அதனை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன் நான்கு பக்கங்களுக்கு அறிக்கை வெளியிட, அந்த அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ஆர்த்தியின் தாயாரான சுஜாதா விஜயகுமார் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இவ்வாறு கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களை ரவி மோகன் விவகாரம் ஆட்கொண்டு வருகிறது.
ரவி மோகன்-கெனிஷா சந்திப்பு
பிரபல பாடகியான கெனிஷா, ஒரு மனநல ஆலோசகராகவும் இருக்கிறார். ஆர்த்தியின் தாயாரான சுஜாதாவின் தொல்லையால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு ஆலோசனை கேட்கவே கெனிஷாவை ரவி மோகன் முதன் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஹமது மீரான் என்ற பிரபல யூட்யூபர் ரவி மோகன்-கெனிஷா உறவு குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அதில், ஒரு மனநல ஆலோசகர் தன்னிடம் ஆலோசனை கேட்டு வரும் நபரிடம் தனிப்பட்ட முறையில் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது, இது மருத்துவ நியதிகளை மீறுவதாகும் என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு அஹமது மீரான் வீடியோ ஒன்றை தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், ரவி மோகன்-கெனிஷா தரப்பில் இருந்து ஒரு அறிமுக நடிகர் தனக்கு ஃபோன் செய்து தன்னிடம் பேரம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, “ரவி மோகனும் கெனிஷாவும் உங்களிடம் பேச வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள்” என கூறினாராம். அதற்கு அஹமது மீரான் மறுத்துள்ளார்.
மேலும் பேசிய அந்த நடிகர், “கெனிஷா மனநல ஆலோசகராக ரவி மோகனை சந்திக்கவில்லை. அவர்கள் முதலில் இருந்தே Date செய்து வந்தார்கள். அவர்கள் நெருங்கி பழகிய பிறகுதான் கெனிஷா ரவி மோகனுக்கு மன நல ஆலோசனைகளை வழங்கினார். ரவி மோகன் மனநல ஆலோசனைக்காக கெனிஷாவை சந்தித்தார் என்று பரவும் செய்தி முழுக்க முழுக்க பொய். இது ஆர்த்தியும் அவரது தாயார் சுஜாதாவும் கிளப்பிவிட்ட வதந்தி” என கூறினாராம். மேலும் அந்த நடிகர் ரவி மோகன்-கெனிஷா ஜோடிக்கு ஆதரவாக பேச குறிப்பிட்ட தொகைக்கு பேரம் பேசவும் தயாராக இருந்தாராம்.
இவ்வாறு ரவி மோகன் தரப்பில் இருந்து தன்னிடம் பேரம் பேச முயன்றதாக தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார் பிரபல யூட்யூபர் அஹமது மீரான். அந்த அறிமுக நடிகர் தனுஷ் இயக்கிய ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் எனவும் அஹமது மீரான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.