அதிமுக – பாஜக கூட்டணி என்பது கூட்டணியா? விசிக எம்பி திருமாவளவன் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2025, 1:13 pm

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் வருகை தந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சியில் 31ஆம் தேதி நடைபெற இருந்த மத சார்பின் காப்போம் பேரணி ஜூன் மாதம் 14ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணிகள் கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்க: அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி.. ‘டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? இபிஎஸ் விமர்சனம்!

பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க அரசு 14கேள்விகளை கேட்க வைத்துள்ளது.

இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, அவர் எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை ஆனால் இந்தியா கூட்டணி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும்.

திமுக இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை.

அதிமுக, பாஜக இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை.

DMK alliance will win in 2026: Thirumavalavan is confident!

அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

  • director ram movie paranthu po getting positive reviewsராம் படம் மாதிரியே இல்ல, நல்லா இருக்கு?- இது பாராட்டா? விமர்சனமா? குழப்பத்தை ஏற்படுத்தும் ரசிகர்கள்!