கர்மா இஸ் பூமராங்- சமந்தாவுக்கு சாபம் விட்ட பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவி? என்னவா இருக்கும்!
Author: Prasad19 May 2025, 1:56 pm
டேட்டிங் செய்யும் சமந்தா?
“ஃபேமிலி மேன்”, “சிட்டாடல்” போன்ற பிரபலமான வெப் சீரீஸ்களை இயக்கியவர்கள் ராஜ்-டிகே. இந்த இருவரில் ராஜ் நிடிமொருவுடன் சமீப நாட்களாக சமந்தா டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருவரும் ஜோடியாக பல விழாக்களில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் வெளிவந்ததால் இப்படிப்பட்ட பேச்சுக்கள் ஊடகங்களில் வலம் வருகிறது.

ராஜ் நிடிமொரு இயக்கிய “ஃபேமிலி மேன்”, “சிட்டாடல்” போன்ற வெப் சீரீஸ்களில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த வெப் சீரீஸ்களில் பணியாற்றிய சமயத்தில்தான் ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சாபம் விட்ட முன்னாள் மனைவி?

இந்த நிலையில் ராஜ் நிடிமொருவின் முன்னாள் மனைவியான ஷ்யாமலி டே, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்த ஒரு ஸ்டோரி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த ஸ்டோரியில் “நீங்கள் செய்த தீய செயல்களுக்கு கர்மா உங்களை தேடி வந்து தண்டிக்கும். நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களை தேடி வந்து ஆசீர்வதிக்கும்” என்று பகிர்ந்திருந்தாராம். இது நேரடியாக எவரையும் குறிப்பிடவில்லை என்றாலும் மறைமுகமாக சமந்தாவிற்கு சாபம் விடுவது போல் அமைந்துள்ளதாக ரசிகர்களின் மத்தியில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.