பாக்கியலட்சுமியும் இல்லை, இது விஜய் படத்தோட காப்பி? தக் லைஃப் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
Author: Prasad19 May 2025, 3:08 pm
அட்டகாசமான டிரெயிலர்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோருடன் திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், சான்யா மல்ஹோத்ரா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் நேற்று முன் தினம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் டிரெயிலரை பார்க்கையில், கேங்கஸ்டராக இருக்கும் கமல்ஹாசன் சிம்புவை சிறு வயதில் இருந்தே எடுத்து வளர்க்கிறார், சிம்பு வளர்ந்தபின் கேங்க்ஸ்டராக இருக்கும் கமல்ஹாசன் தன்னுடைய பல பொறுப்புகளை சிம்புவிடம் அளிக்கிறார்,
ஆனால் சிம்புவோ கமல்ஹாசனின் இடத்திற்கு வர பல முயற்சிகளை செய்கிறார், இது இருவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதையாக இருக்கும் என வியூகிக்கப்படுகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் விஜய்யின் மிக பிரபலமான ஒரு திரைப்படத்தின் காப்பி என இணையத்தில் பேசத் துவங்கிவிட்டனர்.
ஜில்லா

விஜய்யும் மோகன்லாலும் இணைந்து நடித்த “ஜில்லா” திரைப்படத்தை போன்ற ஒரு கதைதான் “தக் லைஃப்” திரைப்படத்தின் கதையும் என பரவலாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. “ஜில்லா” திரைப்படத்தில் மதுரையில் கேங்கஸ்டராக இருக்கும் மோகன்லால் விஜய்யை தத்தெடுத்து வளர்ப்பார். இருவரும் உண்மையான தந்தை-மகன் போலவே பழகி வருவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் விஜய் மோகன்லாலுக்கு எதிராகவே திரும்புவார். அதே போல்தான் “தக் லைஃப்” திரைப்படத்தின் கதையும் என்று கூறுகிறார்கள். எனினும் “தக் லைஃப்” திரைப்படம் வெளிவந்த பிறகே அத்திரைப்படத்தின் கதை எப்படி அமைந்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க முடியும்.
